அயோத்தி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு பிரதமர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025

அயோத்தி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு


பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி கோவிலுக்குச் சென்றார். காலை 10 மணியளவில், அங்கு மஹரிஷி வசிஷ்டர், மஹரிஷி விஸ்வாமித்திரர், மஹரிஷி அகத்தியர், மஹரிஷி வால்மீகி, தேவி அஹில்யா, நிஷாத்ராஜ் குகன், அன்னை சபரி ஆகியோருக்காக கட்டப்பட்டுள்ள ஏழு கோவில்களுக்கு சென்று பிரதமர் தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து, அவர் சேஷாவதார் கோவிலுக்கு சென்றார்.

காலை 11 மணியளவில், பிரதமர் அன்னை அன்னபூர்ணா தேவி கோவிலுக்குச் சென்றார். இதனையடுத்து, அவர் ராம் தர்பார் கர்ப்பக் கிரஹத்தில் தரிசனம் செய்து, பூஜையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து, குழந்தை ராமர் கர்ப்பக் கிரஹத்தில் அவர் தரிசனம் செய்தார்.

Update: 2025-11-25 06:17 GMT

Linked news