திருட்டு நகையை கண்டுபிடிக்க முடியாவிட்டால் அரசு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025
திருட்டு நகையை கண்டுபிடிக்க முடியாவிட்டால் அரசு இழப்பீடு தர வேண்டும் - கோர்ட்டு அதிரடி
திருடுபோன நகையை போலீசார் கண்டுபிடிக்க முடியாவிடில், பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என வழக்கை போலீசார் முடித்து வைத்த நாளில் இருந்து 12 வாரங்களுக்குள், நகையின் மொத்த மதிப்பில் 30 சதவீத தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.
நகை திருட்டு தொடர்பாக மதுரையை சேர்ந்த பெண் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு மதுரைக்கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Update: 2025-11-25 08:09 GMT