அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025
அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் (75) நெல்லையில் இன்று காலை காலமானார். 1977, 1980 தேர்தல்களில் அதிமுக எம்.எல்.ஏ. ஆக தேர்வான இவர் 2000ம் ஆண்டில் அதிமுகவில் இருந்து நீக்கப்படவே திமுகவில் இணைந்தார். 2006ல் திமுக எம்.எல்.ஏ. ஆக தேர்வான இவர், 2016ல் சஸ்பெண்ட் செய்யப்பட மீண்டும் அதிமுகவில் இணைந்தார். 2018ல் மீண்டும் திமுகவில் இணைந்து, 2020ல் மீண்டும் அதிமுகவில் இணைந்து அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
Update: 2025-03-26 03:34 GMT