கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-05-2025
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை தென்மேற்கு பருவமழை காரணமாக அதன் முழு கொள்ளளவான நூறு அடியில் 97 அடி வரை தண்ணீர் நிரம்பியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணையின் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றின் கரை ஓரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விட்டுள்ளது.
Update: 2025-05-26 04:56 GMT