ரிஷப் பண்ட் மீண்டும் எப்போது களத்திற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025
ரிஷப் பண்ட் மீண்டும் எப்போது களத்திற்கு திரும்புவார்..? அஜித் அகர்கர் கொடுத்த முக்கிய அப்டேட்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் 10-ந் தேதியும் தொடங்குகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று துபாயில் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து தொடரில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் கேப்டனாக நீடிக்கிறார். இதில் அனைவரும் நினைத்தது போலவே விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் இடம்பெறவில்லை.
Update: 2025-09-26 05:55 GMT