சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில், போலீசார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-05-2025
சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில், போலீசார் முன்னிலையில் 18 நக்சலைட்டுகள் இன்று சரணடைந்தனர். இவர்களில் 4 பேர் பட்டாலியன் எண்.1 பிரிவை சேர்ந்தவர்கள். மொத்தம் 4 பட்டாலியன்களை சேர்ந்த நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ளனர்.
இதேபோன்று, தெற்கு பஸ்தார் பகுதியில் தீவிர செயல்பாட்டுடன் இருந்தவர்கள் சரண் அடைந்துள்ளனர் என சுக்மா போலீஸ் சூப்பிரெண்டு கிரண் சவான் கூறியுள்ளார்.
அரசின் சரண் கொள்கையின்படி, செயல்பட்டு வரும் அனைத்துவித பலன்களையும் அவர்கள் பெறுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
Update: 2025-05-27 11:21 GMT