சுபமுகூர்த்த தினம்: பத்திரப்பதிவுக்கு கூடுதல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025

சுபமுகூர்த்த தினம்: பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வினியோகம்

தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அதன்படி ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான நாளையும் (வியாழக்கிழமை), நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

Update: 2025-08-27 04:16 GMT

Linked news