மது, போதையில் பெண்கள் என சர்ச்சை பேச்சு; விரதம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025
மத்திய பிரதேசத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மத்தியபிரதேச மாநில பெண்கள், நாட்டின் பிற பகுதிகளை விட அதிகமாக மது அருந்துகின்றனர்.
இதற்காக மத்திய பிரதேசத்துக்கு பதக்கம் அளிக்க வேண்டும். மத்தியபிரதேசத்தை வளமான மாநிலங்களில் ஒன்றாக மாற்ற கனவு காணும் பா.ஜ.க.தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். போதைப்பொருளை ஒழிக்க பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நமது சகோதரிகளும், மகள்களும் போதைப்பொருளை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
போதைப்பொருள் பயன்பாட்டிலும் மத்திய பிரதேச பெண்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். போதைப்பொருள் வர்த்தகத்தில் பஞ்சாப் போன்ற மாநிலங்களை மத்திய பிரதேசம் முந்தி விட்டது என அவர் கூறினார்.
Update: 2025-08-27 06:59 GMT