நாமக்கலில் இன்று பரப்புரை செய்கிறார் தவெக தலைவர்... ... கரூர்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி

நாமக்கலில் இன்று பரப்புரை செய்கிறார் தவெக தலைவர் விஜய் - குவியும் தொண்டர்கள்


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் சனிக்கிழமை தோறும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் இன்று (சனிக்கிழமை) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக அவர் சென்னையில் இருந்து காலையில் விமானம் மூலம் திருச்சிக்கு கிளம்பினார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் நாமக்கல்லுக்கு செல்கிறார். அங்கு சேலம் சாலையில் உள்ள கே.எஸ்.தியேட்டர் அருகே பிரசாரம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் நாமக்கலில் இன்று பரப்புரை செய்ய உள்ள நிலையில், அங்குள்ள கே.எஸ்.திரையரங்கம் முன்பு தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள்.  

Update: 2025-09-27 03:03 GMT

Linked news