121-வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-09-2025
121-வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தலைவர்கள் மரியாதை
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள அவரது உருவச் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலை அருகே அவரது உருவப்படம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
Update: 2025-09-27 05:09 GMT