ஆம்புலன்சுக்கு வழி விட கூறிய விஜய்... அப்போது... ... கரூர்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
ஆம்புலன்சுக்கு வழி விட கூறிய விஜய்... அப்போது நடந்த சம்பவம்
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம் இரவு 7.20 மணியளவில் தொடங்கியது. அப்போது, த.வெ.க. கொடியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. உடனே, அதற்கு வழி விடும்படி விஜய் கூறினார். அதன்பின்னே மற்றொரு ஆம்புலன்சும் சென்றது.
அப்போது, அந்த ஆம்புலன்சின் உட்புறம் முன்பகுதியில், த.வெ.க. கொடி வைக்கப்பட்டு இருந்தது. இதனை கவனித்த விஜய், என்ன ஆம்புலன்ஸ் நம்ம கொடியுடன் போகுது என கூறினார். அ.தி.மு.க. அரசியல் கூட்டத்தின் இடையேயும் இதுபோன்று ஆம்புலன்ஸ் சென்று அது சர்ச்சையானது. ஆம்புலன்ஸ் செல்ல கூடிய இடத்தில் பிரசார அனுமதி கொடுத்ததும் மறுபுறம் சர்ச்சையானது.
Update: 2025-09-27 14:01 GMT