செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தவெக தலைமை அலுவலகம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தவெக தலைமை அலுவலகம் வருகை

இன்று(நவ.27) காலை தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளநிலையில், முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

நேற்று(நவ.26) தவெக தலைவர் விஜயை சந்தித்து சுமார் இரண்டரை மணிநேரம் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்; செங்கோட்டையனுக்கு தவெகவில் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2025-11-27 04:13 GMT

Linked news