த.வெக.வில் இணைந்தது ஏன்? செங்கோட்டையன் பரபரப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025
த.வெக.வில் இணைந்தது ஏன்? செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், “அதிமுகவில் புரட்சி தலைவரால் அடையாளம் காணப்பட்டவன் நான். அதிமுக உருவான போது எம்ஜிஆர் உடன் சென்றவன் நான். புரட்சி தலைவி ஜெயலலிதாவின் பாராட்டையும் பெற்றவன் அதிமுக மீண்டும் ஒன்றனைய வேண்டும் என்று வலியுறுத்தினோம் .அது நடக்கவில்லை.என்னை திட்டமிட்டு வெளியேற்றியவர் எடப்பாடி பழனிசாமி.நான் தவெகவில் இணைந்ததற்கு காரணம் உள்ளது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும். தமிழ்நாட்டில் தூய்மையான அரசியலை முன்னெடுத்துள்ளார் விஜய்” என்று கூறினார்.
Update: 2025-11-27 07:46 GMT