கரூர் சம்பவம்: நடந்தது என்ன? டிஜிபி அலுவலகம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025

கரூர் சம்பவம்: நடந்தது என்ன? டிஜிபி அலுவலகம் விளக்கம்


கரூரில் என்ன நடந்தது என்பது குறித்து டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,

*கரூரில் 10,000 பேரை எதிர்பார்ப்பதாக கூறிதான் தவெக அனுமதி பெற்றது.

*இருப்பினும் முந்தைய கூட்டங்களை கருத்தில் கொண்டு சுமார் 500 காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

*மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நேரம் கேட்டிருந்த போதும், மதியம் 12 மணிக்கு விஜய் வருவார் என அக்கட்சியினர் அறிவித்துவிட்டனர்.

*ஆனால், இரவு சுமார் 7.10 மணிக்குத்தான் அவர் வந்தடைந்தார். இதற்கிடையில், காலை சுமார் 11 மணியிலிருந்தே அவரை காண கூட்டம் கூட தொடங்கிவிட்டது.

*தவெக கேட்டிருந்த உழவர் சந்தை மற்றும் லைட்ஹவுஸ் ரவுண்டானா, ஒதுக்கப்பட்ட வேலுச்சாமிபுரத்தைவிட குறுகலானவை.

*விஜய் பேச ஆரம்பித்த போது காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளதாக நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Update: 2025-09-28 04:11 GMT

Linked news