காசாவில் 140 பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
காசாவில் 140 பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல்: இஸ்ரேல் பாதுகாப்பு படை
இஸ்ரேல் பாதுகாப்பு படை எக்ஸ் வலைதளத்தில் இன்று வெளியிட்ட செய்தியில், காசா நகரில், இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் இஸ்ரேல் விமான படை இணைந்து நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்புகள் மற்றும் வளாகங்கள் தகர்க்கப்பட்டன. பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ஏவிய பல்வேறு பயங்கரவாதிகளும் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டனர் என தெரிவித்து உள்ளது.
காசாவில் 140 பயங்கரவாத இலக்குகளை இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தி அழித்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
Update: 2025-09-28 13:27 GMT