ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு அரசு நிலம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025
ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு அரசு நிலம் மீட்பு
சென்னை ஆலந்தூர் பகுதியில் குத்தகைக் காலம் முடிந்தும் வணிக ரீதியாக செயல்பட்டு வந்த கட்டிடத்தை மீட்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நிலத்தை அரசு கையகப்படுத்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இன்று காலை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரின் உத்தரவை அடுத்து கட்டிடத்தில் செயல்பட்ட ஓட்டல் ஊழியர்களை வெளியேற்றிய அதிகாரிகள், ஓட்டலின் பெயர்ப் பலகையை அகற்றி கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.
Update: 2025-10-28 05:21 GMT