டெல்லியில் பா.ஜ.க. சார்பில் வீர மங்கை வேலு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-03-2025

டெல்லியில் பா.ஜ.க. சார்பில் வீர மங்கை வேலு நாச்சியாருக்கு இன்று புகழஞ்சலி செலுத்தப்பட உள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட முதல் பெண் ஆட்சியாளர் என்ற பெருமையை பெற்றவர் தமிழகத்தின் சிவகங்கை ராணி வேலு நாச்சியார்.

வீரமங்கை வேலு நாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வு டெல்லியில் உள்ள கேதர்நாத் ஷானி கலையரங்கத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சியில் அவரைப்பற்றிய சித்திர புத்தக வெளியீடும், நாடக நிகழ்ச்சியும் நடைபெறும்.

Update: 2025-03-29 04:21 GMT

Linked news