திருக்கணித பஞ்சாங்க முறைப்படி இன்று சனிப்பெயர்ச்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-03-2025
திருக்கணித பஞ்சாங்க முறைப்படி இன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இதனையொட்டி திருநள்ளாறு கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சனீஸ்வர பகவான் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.
நள தீர்த்தத்தில் புனித நீராடி எள் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். வாக்கிய பஞ்சாங்க முறைப்படி 2026-ல் சனிப்பெயர்ச்சி ஏற்படும் என திருநள்ளாறு கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
Update: 2025-03-29 04:46 GMT