7-வது மாநில நிதி ஆணையம் அமைப்பு; தமிழக அரசு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-05-2025

7-வது மாநில நிதி ஆணையம் அமைப்பு; தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன் தலைமையில் 7-வது மாநில நிதி ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதிகாரி அலாவுதீன் தலைமையில் மொத்தம் 6 பேர் கொண்ட குழுவினர் செயல்படும் வகையில் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமையை ஆய்வு செய்து, மாநில அரசு வழங்க வேண்டிய நிதிப்பகிர்வு பற்றி அரசுக்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவார்கள்.

Update: 2025-05-29 12:34 GMT

Linked news