உலகளவில் மே 11 வரையிலான 28 நாட்களில் 91,583... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-05-2025

உலகளவில் மே 11 வரையிலான 28 நாட்களில் 91,583 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் மே 28-ந்தேதி வரையில் 1,009 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் கேரளா (430), மராட்டியம் (209) மற்றும் டெல்லி (104) ஆகியவை அதிக பாதிப்புகளை சந்தித்து உள்ளன. இதேபோன்று பஞ்சாப், கர்நாடகா, தமிழகம், குஜராத்திலும் தொற்று அதிகரித்து வருகிறது.

தெற்கு ஆசியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று சமீப வாரங்களாக அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. இந்தியா மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்றுகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால், சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் கண்காணிப்பு முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

Update: 2025-05-29 14:46 GMT

Linked news