பஞ்சாப் வெள்ளம்: அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 3-9-2025

பஞ்சாப் வெள்ளம்: அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு 7-ந்தேதி வரை விடுமுறை

பஞ்சாபில் ஓட கூடிய சட்லெஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதுவரை வெள்ளத்திற்கு 30 பேர் பலியாகி உள்ளனர். 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், மாநிலத்தில் நிலவும் வெள்ள நிலைமையை முன்னிட்டு, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் வெளியிட்ட உத்தரவின்படி, அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் செப்டம்பர் 7-ந்தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2025-09-03 13:16 GMT

Linked news