ஜூன் 9-ம் தேதி பள்ளி திறப்பு..?- தமிழ்நாடு அரசு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-05-2025
ஜூன் 9-ம் தேதி பள்ளி திறப்பு..?- தமிழ்நாடு அரசு விளக்கம்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது ஆனால் ஜூன் 9 ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவியது.
இந்த நிலையில், இந்தத் தகவல் குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 9ஆம் தேதி திறப்பதாகப் பரப்பப்படுவது வதந்தி என்று தெரிவித்துள்ளது. இதனால் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதியாகியுள்ளது.
Update: 2025-05-30 11:57 GMT