சீனாவில் 1-ந்தேதி பிரதமர் மோடி-புதின் சந்திப்பு -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
சீனாவில் 1-ந்தேதி பிரதமர் மோடி-புதின் சந்திப்பு - கிரெம்ளின் மாளிகை உறுதி
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 1-ந் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷிய அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
இந்த தகவலை கிரெம்ளின் மாளிகையின் வெளிநாட்டு கொள்கை ஆலோசகர் யுரி உஷாகோவ் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது. '1-ந்தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சந்திப்புக்குப்பின் உடனடியாக எங்கள் அதிபர் (புதின்) மற்றும் இந்திய பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு நடக்கிறது' என்று கூறினார்.
Update: 2025-08-30 03:40 GMT