ஜப்பானில் 16 மாகாண கவர்னர்களுடன் பிரதமர் மோடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025

ஜப்பானில் 16 மாகாண கவர்னர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு


பிரதமர் மோடி இன்று ஜப்பானில் உள்ள சுமார் 16 மாகாணங்களின் கவர்னர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது இந்திய அரசு மற்றும் ஜப்பான் மாகாணங்கள் இடையிலான கூட்டு ஒத்துழைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று காலை டோக்கியோவில், ஜப்பானின் 16 மாகாணங்களின் கவர்னர்களுடன் கலந்துரையாடினேன். இந்தியா-ஜப்பான் நட்பின் முக்கிய தூணாக மத்திய அரசு-மாகாண அரசு ஒத்துழைப்பு உள்ளது. இதனால்தான் நேற்று நடைபெற்ற 15-வது ஆண்டு இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டின்போது இது குறித்த தனி இயக்கம் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் வர்த்தகம், புதுமை, தொழில்முனைவு மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்த மகத்தான வாய்ப்புகள் உருவாகும். புதிய நிறுவனங்கள், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்காலத் துறைகளும் பயன்பெறும்" என்று பதிவிட்டுள்ளார்.

Update: 2025-08-30 04:36 GMT

Linked news