அமேசான் காட்டுப் பகுதியில் பாலம் கட்ட திட்டமிட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025

அமேசான் காட்டுப் பகுதியில் பாலம் கட்ட திட்டமிட்ட அரசு; வெளியேறிய பழங்குடியின மக்கள் - வலுக்கும் கண்டனம்


தென் அமெரிக்க நாடுகளில் அமேசான் காடுகள் அதிகளவில் படர்ந்து காணப்படுகின்றன. பெருவில் உள்ள அமேசான் காடுகளில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் வெளி உலகத்துடனான தொடர்பை தவிர்த்து வருகிறார்கள்.

சுமார் 200 குடும்பங்கள் அளவில் வசித்து வரும் அங்கு காட்டை அழித்துவிட்டு பாலத்துடன் கூடிய பூங்கா ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மேலும் பழங்குடிகளுக்கு அரசு சார்பில் வீடு கட்டி தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அரசின் வாக்குறுதியை ஏற்க மறுத்த பழங்குடிகள், அவர்கள் அங்கிருந்து மேலும் அடர்ந்த காடுகளுக்கும் அருகே உள்ள காட்டில் வாழும் மற்றொரு பழங்குடியினர் வாழும் இடத்திற்கு புலம் பெயர்ந்தனர். அரசாங்கத்தின் இந்த செயலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி உலகநாடுகளிடையே கண்டனம் வலுத்து வருகிறது.


Update: 2025-08-30 04:39 GMT

Linked news