மூப்பனார் பிரதமராக வருவதைத் தடுத்தனர் - நிர்மலா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025

மூப்பனார் பிரதமராக வருவதைத் தடுத்தனர் - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு


சென்னையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனாரின் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், “மூப்பனார் பிரதமராக வருவதைத் தடுத்தனர். நல்லாட்சியை மக்கள் தேடி வருகின்றனர்.

உங்கள் அனைவரிடமும் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டணி நல்ல முறையில் நடத்த வேண்டும். இந்த கூட்டணி மூலமாக மக்களுக்கு செய்ய வேண்டிய தொண்டை ஆற்ற வேண்டும். தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். சிறிய சிறிய பூசல்களைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட வேண்டும். இந்த கூட்டணியை நல்லபடியாக நடத்த வேண்டும்” என்று கூறினார்.

Update: 2025-08-30 06:24 GMT

Linked news