ராமதாஸ் தலைமையில் நாளை மறுதினம் பா.ம.க. ஒழுங்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
ராமதாஸ் தலைமையில் நாளை மறுதினம் பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம்
ராமதாஸ் தலைமையில் நாளை மறுதினம் பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராமதாசிடம் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை அளித்திருந்தது. குற்றச்சாட்டுகள் குறித்து நாளைக்குள் பதிலளிக்க அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு கெடு விதித்திருந்தது.
இந்நிலையில் இதுவரை அன்புமணி இதற்கு பதில் அளிக்காதநிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை மறுதினம் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Update: 2025-08-30 07:10 GMT