சென்னை விமான நிலையத்தில் சிபிஐ சோதனை சென்னையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
சென்னை விமான நிலையத்தில் சிபிஐ சோதனை
சென்னையில் இருந்து வெளிநாட்டுகளுக்கு போலி நகைகளை ஏற்றுமதி செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி என புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். ஒரிஜினல் தங்க ஆபரணங்களுக்கு பதிலாக, தங்க முலாம் பூசிய போலி நகைகளை ஏற்றுமதி செய்து மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிபிஐ சோதனையால் சென்னை விமான நிலையம் கார்கோ பகுதி, சுங்கத்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2025-08-30 08:09 GMT