சென்னை விமான நிலையத்தில் இருந்து வழக்கம்போல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025

சென்னை விமான நிலையத்தில் இருந்து வழக்கம்போல் விமானங்கள் இயக்கம் 


டிட்வா புயலின் வேகமும், மழையும் குறைந்ததை அடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சிக்கு இயக்கப்படும் விமானங்கள் இன்று வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. சென்னை-யாழ்ப்பாணம் இடையே இயக்கப்படும் 2 விமானங்கள் மட்டும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகள் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு பயண விவரங்களை அறிந்து கொள்ளும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Update: 2025-11-30 04:18 GMT

Linked news