பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். வாக்காளர் படிவத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025
பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். வாக்காளர் படிவத்தை ஒப்படைக்க டிச.11 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். வாக்காளர் படிவத்தை ஒப்படைக்க டிச.11 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 4ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த அவகாசம் 11 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கின.
இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16-ம் தேதி மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-11-30 06:51 GMT