14-ம் போப் லியோவுடன் இஸ்ரேல் ஜனாதிபதி நேரில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 4-9-2025
14-ம் போப் லியோவுடன் இஸ்ரேல் ஜனாதிபதி நேரில் சந்திப்பு
இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜாக் இன்று 14-ம் போப் லியோவை நேரில் சந்தித்து பேசினார். இதற்காக, வாகன அணிவகுப்பு மற்றும் பலத்த பாதுகாப்புடன் அபோஸ்தலிக் அரண்மனைக்கு ஹெர்ஜாக் சென்று சேர்ந்துள்ளார்.
இந்த சந்திப்பு பற்றி இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக்கின் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், பணய கைதிகளை விடுவிப்பது. யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிரான போர் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் கிறிஸ்தவ சமூகத்தினரை பாதுகாப்பது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவதற்கான முயற்சிகளை பற்றி பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்து உள்ளது.
Update: 2025-09-04 11:53 GMT