சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து மீண்டும் விமானம் திரும்பி சென்னைக்கு அவசரமாக தரையிறங்கியது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விமானியின் துரித நடவடிக்கையால் 159 பயணிகள் உயிர்தப்பினர். மற்றொரு விமானம் மூலம் சிங்கப்பூருக்கு பயணிகள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
Update: 2025-01-10 04:02 GMT