உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷியாவுக்கு எதிராக... ... #லைவ் அப்டேட்ஸ்: குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் - ஜெலன்ஸ்கி வேண்டுகோள்


உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை விதித்துள்ளன. இந்தநிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 நாடுகள் மாநாடு, நேற்று ஜெர்மனியில் உள்ள எல்மாவில் தொடங்கியது. அதில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அங்கு சென்றுள்ளார்.

அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ரஷியாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்ய அமெரிக்காவும், இதர ஜி-7 நாடுகளும் தடை விதிக்க உள்ளதாக கூறினார். உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார். இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு, நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியாகிறது.

எரிசக்திக்கு அடுத்தபடியாக ரஷியா அதிகமாக ஏற்றுமதி செய்யும் பொருள் தங்கம் ஆகும். எனவே, அதற்கு தடை விதித்தால், ரஷியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Update: 2022-06-26 21:35 GMT

Linked news