உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து; ரஷிய மக்கள் போராட்டம்

சமீபத்தில் முடிவடைந்த ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில், உக்ரைனுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டது. மறுமுனையில், உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி செய்து வரும் ஐரோப்பிய ஒன்றியம், அந்நாட்டை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

உக்ரைன் மற்றும் மால்டோவா நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவை எதிர்த்து ரஷிய மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.

இதனை கண்டித்த உக்ரைன் தரப்பில், அந்நாட்டின் தூதரக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இத்தகைய நடவடிக்கைகள் ரஷியாவின் பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

‘ஆக்கிரமிப்பு, வற்புறுத்தல் மற்றும் மரியாதை இல்லாமை ஆகியவற்றின் அடிப்படையிலான கொள்கைகளை’ கடந்த பல ஆண்டுகளாக ரஷியா இழந்துவிட்டது. அதன் பின், ரஷியாவால் இப்போது செய்யக்கூடிய விஷயம், மற்ற நாடுகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களை தொடர்வது மட்டுமே” என்றார்.

Update: 2022-06-25 11:51 GMT

Linked news