மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியது,... ... #லைவ் அப்டேட்ஸ்; பேச்சுவார்த்தையால் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியது, ரஷியா

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போரைத் தொடங்கியது. 3 மாதமாக இந்தப் போர் நீடித்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றும் ரஷியாவின் கனவு பலிக்கவில்லை. ஆனால் அதன் மற்றொரு முக்கிய நகரமான மரியுபோல் நகரை கைப்பற்றும் கனவு நிறைவேறி உள்ளது. அந்த நகரை ஏற்கனவே கைப்பற்றியதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். அங்கு போர் தொடங்கிய நாள் முதல் முற்றுகையிட்டு, ரஷிய படைகள் நடத்திய தாக்குதல் அந்த நகரை உருக்குலைந்து போகச்செய்தது.

அந்த நகரின் கடைசி கோட்டையாக விளங்கிய அஜோவ் உருக்காலையைக் காத்துக்கொண்டிருந்த 2,439 உக்ரைன் படைவீரர்களும் சரண் அடைந்து விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. சரண் அடைந்தவர்களில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் முன்னாள் தண்டனை காலனிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் மரியுபோல் முற்றிலும் கைப்பற்றப்பட்டு விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. மரியுபோல் நகரம் முற்றிலும் விடுவிக்கப்பட்டு விட்டதாக ரஷிய அதிபர் புதினிடம், அந்த நாட்டின் ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார். இது ரஷிய நாட்டுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி ஆகும்.

Update: 2022-05-22 03:02 GMT

Linked news