உக்ரைனுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதி உதவி: ஜோ பைடன் ஒப்புதல்

உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 40 பில்லியன் டாலர் உதவியை (சுமார் ரூ.3 லட்சம் கோடி) வழங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மசோதா நிறைவேறியது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டார். இதற்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துக்கொண்டார். உக்ரைனுக்கு மேலும் 9.5 பில்லியன் டாலர் நிதி (சுமார் ரூ.71 ஆயிரத்து 250 கோடி) வழங்க ஜி-7 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

Update: 2022-05-22 03:11 GMT

Linked news