பின்லாந்துக்கு எரிவாயு நிறுத்தம்
கெர்சன் நகரில் இருந்து மக்கள் வெளியேறி, உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிக்கு செல்வதற்கு விடாமல் ரஷிய படைகள் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கெர்சன் பிராந்தியத்தில் உள்ள கிராமங்கள் மனித நேய நெருக்கடிக்கு ஆளாகும் அபாயம் எழுந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷியாவிடம் இயற்கை எரிவாயு வினியோகத்துக்கான பணத்தை ரஷிய பணமான ரூபிளில் பின்லாந்து தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பின்லாந்துக்கான எரிவாயு வினியோகத்தை ரஷியா நிறுத்தி உள்ளது.
Update: 2022-05-22 06:28 GMT