’என் தன்னம்பிக்கையை எதனாலும் உடைக்க முடியாது’ - நடிகை வர்ஷினி
வர்ஷினி சமீபத்தில் ’சொட்ட சொட்ட நனையுது’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.;
சென்னை,
பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் வர்ஷினி வெங்கட். அதிக நாட்கள் இல்லை என்றாலும் அவர் இருந்தவரை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான ’டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வரும் வர்ஷினி சமீபத்தில் ’சொட்ட சொட்ட நனையுது’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படங்கள் மட்டுமில்லாமல், சமூக வலைதளத்திலும் இவர் ஆக்டிவாக இருக்கிறார். இவர் சமீபத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்ட பதிவு கவனம் ஈர்த்துள்ளது. அதில், ’எதனாலும் என் தன்னம்பிக்கையை உடைக்க முடியாது’ என்று டைட்டில் வைத்துள்ளார்.