’ஸ்குவிட் கேம் அமெரிக்கா’...வெளியான முக்கிய அப்டேட்

நெட்பிளிக்ஸில் மிகவும் பிரபலமான வெப் தொடர்களில் ஒன்று ஸ்குவிட் கேம் .;

Update:2025-11-24 07:22 IST

சென்னை,

உலகளவில் பெறும் வரவேற்பைப் பெற்ற தென்கொரிய தொடரான 'ஸ்குவிட் கேம் '-ன் அமெரிக்க வெர்ஷன் புதிய கதைக் களம், கதாபாத்திரங்களுடன் உருவாகிறது.

ஸ்குவிட் கேம் இயக்குநர் ஹ்வாங் டாங் - ஹியூக் மற்றும் பிரபல ஹாலிவுட் பட இயக்குநர் டேவிட் பின்சர் ஆகியோர் இணைந்து இதனை உருவாக்குகிறார்கள். இந்த தொடரின் படபிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நெட்பிளிக்ஸில் மிகவும் பிரபலமான வெப் தொடர்களில் ஒன்றான ஸ்குவிட் கேம் , அதன் மூன்றாவது சீசனுடன் முடிவடைந்தது. இது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடைய செய்தது.  இறுதி சீசனில் பல பிரபலமான கதாபாத்திரங்கள் மரணமடைந்ததால் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்