''தலைவன் தலைவி'' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?
''தலைவன் தலைவி'' படத்தின் முதல் நாள் வசூல் சிறப்பாக இருந்திருக்கிறது.;
சென்னை,
1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான ''தலைவன் தலைவி'' படத்தின் முதல் நாள் வசூல் சிறப்பாக இருந்திருக்கிறது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'தலைவன் தலைவி'. இது விஜய் சேதுபதியின் 52-வது படமாகும்.
விஜய் சேதுபதி - பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்ப 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், ''தலைவன் தலைவி'' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படம் சுமார் ரூ. 4.15 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.