தாவுத் - சினிமா விமர்சனம்

பிரசாந்த் ராமன் இயக்கத்தில் லிங்கா நடிப்பில் வெளியான ‘தாவுத்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;

Update:2025-11-17 17:36 IST

மும்பையில் இருந்துக் கொண்டு தமிழ்நாட்டிலும் தனது போதை பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை நடத்துகிறார், தாவுத். ஆனால் வெளியுலகுக்கு அவரது முகம் தெரியாத நிலையே இருக்கிறது. முகம் காட்டாமல் விளையாடி வரும் தாவுத்தை பிடிக்க காவல்துறை களமிறங்குகிறது. இதற்கிடையில் தாவுத்தின் கூட்டாளியான சாய்தீனா, அவரிடம் இருந்து ஒட்டுமொத்த சரக்குகளையும் அபகரிக்க துணிகிறார். அதேவேளை போட்டி கடத்தல் கும்பலும் போதைப்பொருகளை கைப்பற்றத் துடிக்கிறது.

Advertising
Advertising

இதற்கிடையில் லிங்கா அனுப்பிய சரக்கை, சரியான இடத்துக்கு கொண்டு செல்லும் அபிஷேக், வழக்கமான ஆட்கள் மூலம் செய்தால் தெரிந்துவிடும் என்பதால் புதிய நபரை தேடுகிறார். அதன்படி, வாடகை கார் டிரைவரான லிங்காவை தேர்வு செய்கிறார். பணத்தேவைக்காக இந்த வேலைக்கு ஒப்புக்கொள்ளும் லிங்கா தாவுத்தின் சரக்கை சொன்ன இடத்தில் ஒப்படைத்தாரா? நிழல் உலகத்தில் வாழும் தாவுத் வெளிச்சத்துக்கு வந்தாரா? என்ன ஆனது? என்பதே பரபரப்பான மீதி கதை. 

அப்பாவியான முகம், அளவான நடிப்பு என்று தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் விதமாக நடித்திருக்கிறார் லிங்கா. அவரது பின்னணியும் அழுத்தம் சேர்க்கிறது. கதாநாயகி சாரா ஆர்ச்சரின் கதாபாத்திரம் குழப்பம் ஏற்படுத்துகிறது. ஹீரோவுக்கு ஜோடியாக சுற்றாமல் வில்லனுக்கு ஜோடியாக வருவது யோசிக்க வைக்கிறது.

காவல்துறை அதிகாரியாக வரும் அர்ஜெய், தாவுத்தின் அடியாளாக நடித்திருக்கும் திலீபன், சாய் தீனா, சரத்ரவி, அபிஷேக், வையாபுரி, ராதாரவி என அத்தனை பேரின் நடிப்பிலும் நிறைவு. ராகேஷ் அம்பிகாபதி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் ஆகியோரது ஒளிப்பதிவு திரில்லர் உணர்வுக்கு பலம் சேர்த்துள்ளது.

பரபரப்பான கதைக்களம் பலம். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் இவ்வளவு பில்டப் தேவையா? சில காட்சிகளை புரிந்துகொள்ளவே முடியவில்லை. குறிப்பாக தாவுத் யார்? என்பதற்கான விளக்கம் சரிவர சொல்லவில்லையே...

எது எப்படியோ, ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்புக்கு குறைவில்லாமல் படத்தை நகர்த்தி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் பிரசாந்த் ராமன்.

தாவுத் - தடைகளை மீறி... 

Tags:    

மேலும் செய்திகள்