பெருங்களூர் பிடாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
பூச்சொரிதல் வைபவத்தை முன்னிட்டு பிடாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.;
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
விழாவில் பெருங்களூர் கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் மட்டுமின்றி, மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம்களும், அம்மன் சிலையுடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பூக்களை எடுத்துக்கொண்டு தாரை தப்பட்டை முழங்க நான்கு ரத வீதிகளின் வழியாக வலம்வந்து பிடாரியம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர். அதற்கு முன்பாக பிடாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.