அஜ்மான்: அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து பள்ளிக்கூட மாணவன் பலி

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த பள்ளிக்கூட மாணவன் பலியானார்.;

Update:2023-10-25 01:13 IST

அஜ்மான்,

அஜ்மானில் உள்ள இந்திய பள்ளிக்கூடத்தில் கேரளாவை சேர்ந்த மாணவன் (வயது 17) படித்து வந்தார். அவர் தனது பெற்றோர்களுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் வசித்து வரும் மாடியிலிருந்து தவறி விழுந்து பலியானார். இது குறித்து அஜ்மான் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான மாணவரின் தந்தை தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தாயார் துபாயில் நர்சாக பணிபுரிகிறார். மேலும் அவருக்கு 2 இளைய சகோதரிகள் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்