அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு

இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது ரூ.89.96 ஆக இருந்தது.;

Update:2025-12-03 10:38 IST

புதுடெல்லி,

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் இன்று தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக, வருகிற 5-ந்தேதி வட்டி விகிதம் தொடர்பான முடிவு வெளியிடப்படும். இந்த சூழலில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவடைந்து உள்ளது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.96 ஆக இருந்தது.

எனினும், அது விரைவில் ரூ.90.13 என வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்தது. இதற்கு முன் நிறைவடைந்த வர்த்தகத்தின்போது, அது ரூ.89.87 என்ற அளவில் இருந்தது. இதுபற்றி அந்நிய செலாவணி நிறுவனம் ஒன்றின் மேலாண் இயக்குநரான அமித் பபாரி என்பவர் கூறும்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் ரூ.88.90 முதல் ரூ.90.20-க்கு இடைப்பட்ட அளவில் இருக்கும்.

ரூ.89-க்கு கீழ் வருவது என்பது, இறுதியாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவில் இருந்து மீண்டு, மீண்டும் வலுவடைவதற்கான உண்மையான முதல் அறிகுறியாக இருக்கும் என நேர்மறையாக கூறினார். டாலர் குறியீடு பலவீனமடைந்திருந்தபோதும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தடைபட்ட நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்