அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
மும்பை,
சர்வதேச வர்த்தக நிலையற்ற தன்மை, அமெரிக்கா - வெனிசுலா மோதல், இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பு அச்சம் உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது.
இந்நிலையில், வாரத்தின் முதல்நாளான இன்று (12.01.2026 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 106 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 790 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 198 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 450 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
136 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 518 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 301 புள்ளிகள் ஏற்றம்பெற்ற சென்செக்ஸ் 83 ஆயிரத்து 878 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
20 புள்ளிகள் அதிகரித்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 696 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 243 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 860 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.