தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள் எவை? விவரம்
தமிழக மாணவ-மாணவிகள் மட்டுமின்றி உலக அளவிலுள்ள தமிழ் ஆர்வலர்களும் பயன்பெறும் விதத்தில் பல்வேறு பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் ஆகியவை இங்கு நடத்தப்படுகின்றன.;
தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் 1981ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. தஞ்சாவூரிலிருந்து திருச்சி செல்லும் பாதையில் இந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. சுமார் 975 ஏக்கர் பரப்பளவில் இந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் மிகப்பெரிய நூலக வசதிகொண்ட இந்தப் பல்கலைக்கழகம் தமிழ்மொழியின் சிறப்புகளையும், தமிழ் நாகரிகத்தின் ஆராய்ச்சிகளையும், தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் கலை தொடர்பான ஆவணங்களை ஆய்வுசெய்யும் ஓர் உயர் ஆராய்ச்சி மையமாகத் திகழ்கிறது.
தமிழக மாணவ-மாணவிகள் மட்டுமின்றி உலக அளவிலுள்ள தமிழ் ஆர்வலர்களும் பயன்பெறும் விதத்தில் பல்வேறு பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் ஆகியவை இங்கு நடத்தப்படுகின்றன. சிறந்த இணையதள வயதி, மாணவர்கள் தங்கும் விடுதிகள், சிறப்புப் பயிற்சிகளுக்கான வசதிகள், மேம்படுத்தப்பட்ட உடற்பயிற்சி கூடம், சிறந்த விளையாட்டு மைதானம் ஆகிய வசதிகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருப்பதால் இங்கு பயிலும் மாணவ –மாணவிகள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஏராளமான படிப்புகள்
தமிழ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் படிப்புகள் பற்றிய முழு விவரம்:
I.முதுகலை பட்டப்படப்படிப்புகள்
(Post Graduate Courses)
முதுகலை பட்டப்படிப்புகளாக –
1. ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப்படிப்புகள் (5 years Integrated Post Graduate Degree Courses)
2. முதுகலை / முதுஅறிவியல் பட்டப்படிப்புகள் (2 years Degree Courses Post Graduate)
-என இரு பிரிவாக நடத்தப்படுகின்றன.
1)ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப்படிப்புகள் (5 years Integrated Post Graduate Degree Courses) ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுகலை பட்டப்படிப்புகளாக - இரண்டு பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன.
v ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுகலைத் தமிழ் (5 years Integrated M.A. Tamil)
v ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுகலை வரலாறு (5 years Integrated M.A. History)
ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுகலைத் தமிழ் (5 years Integrated M.A. Tamil) படிப்பில் பிளஸ் 2 படிப்பை படித்து முடித்தவர்கள் சேர்ந்து படிக்கலாம். இந்தப் படிப்பை பல்கலைக்கழகத்திலுள்ள இலக்கியத் துறை நடத்துகிறது. இந்தப்படிப்பில் 50 மாணவ-மாணவிகள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுகலை வரலாறு (5 years Integrated M.A. History) படிப்பில் பிளஸ் 2 படிப்பை படித்து முடித்தவர்கள் சேர்ந்து படிக்கலாம். இந்தப் படிப்பை பல்கலைக்கழகத்திலுள்ள கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை நடத்துகிறது. இந்தப்படிப்பில் 40 மாணவ-மாணவிகள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
2)முதுகலை - முதுஅறிவியல் பட்டப்படிப்புகள் (2 years Degree Courses Post Graduate)
முதுகலை - முதுஅறிவியல் பட்டப்படிப்புகள் (2 years Degree Courses Post Graduate)
படிப்பில் -
1.முதுகலைத் தமிழ் (M.A. Tamil)
2.முது நுண்கலை சிற்பம் (MFA Sculpture)
3.முதுகலை இசை (M.A. Music)
4.முதுகலை நாடகம் மற்றும் அரங்ககலை (M.A. Performing Arts)
5.முதுகலை வரலாறு மற்றும் தொல்லியல் (M.A. History and Archeology)
6. முதுகலை மொழியியல் (M.A., Linguistics)
7.முதுகலை சமூகப்பணி (Master of Social Work)
8.முதுஅறிவியல் - சுற்றுச்சூழல் அறிவியல் (M.Sc. Environmental Science)
9.முதுஅறிவியல் - கணிப்பொறி அறிவியல் (M.Sc. Computer Science)
10..முதுஅறிவியல் - நிலத்தியல் (M.Sc. Geology)
11.முதுநிலை – மெய்யியல் (M.A. Philosophy)-ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.
*முதுகலைத் தமிழ் (M.A. Tamil)படிப்பில் சேர, இளங்கலை தமிழ் அல்லது பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் இலக்கியத்துறை இந்தப் படிப்பை நடத்துகிறது. மொத்தம் 40 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
*முது நுண்கலை சிற்பம் (MFA Sculpture) படிப்பில் சேர, இளங்கலை தமிழ் ஃ வரலாறு அல்லது பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிற்பத்துறை இந்தப் படிப்பை நடத்துகிறது. மொத்தம் 20 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
*முதுகலை இசை (M.A. Music) படிப்பில் சேர, இளங்கலை தமிழ் அல்லது பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இசைத்துறை இந்தப் படிப்பை நடத்துகிறது. மொத்தம் 20 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
*முதுகலை நாடகம் மற்றும் அரங்ககலை (M.A. Performing Arts) படிப்பில் சேர, இளங்கலை தமிழ் / வரலாறு அல்லது பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாடகத்துறை இந்தப் படிப்பை நடத்துகிறது. மொத்தம் 20 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
*முதுகலை வரலாறு மற்றும் தொல்லியல் (M.A. History and Archeology) படிப்பில் சேர, இளங்கலை வரலாறு அல்லது பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறை இந்தப் படிப்பை நடத்துகிறது. மொத்தம் 50 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
*முதுகலை மொழியியல் (M.A., Linguistics) படிப்பில் சேர, இளங்கலை தமிழ் அல்லது பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொழியியல் துறை இந்தப் படிப்பை நடத்துகிறது. மொத்தம் 20 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
*முதுகலை சமூகப்பணி (Master of Social Work) படிப்பில் சேர, பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமூக அறிவியல்துறை இந்தப் படிப்பை நடத்துகிறது. மொத்தம் 20 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
*முதுஅறிவியல் - சுற்றுச்சூழல் அறிவியல் (M.Sc. Environmental Science) படிப்பில் சேர, இளங்கலை தமிழ் அல்லது பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல்துறை இந்தப் படிப்பை நடத்துகிறது. மொத்தம் 20 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
*முதுஅறிவியல் - கணிப்பொறி அறிவியல் (M.Sc. Computer Science) படிப்பில் சேர, இளங்கலை தமிழ் அல்லது பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் ஃ கணிப்பொறி அறிவியல் அல்லது பி.சி.ஏ. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிப்பொறி அறிவியல்துறை இந்தப் படிப்பை நடத்துகிறது. மொத்தம் 20 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
*முதுஅறிவியல் - நிலத்தியல் (M.Sc. Geology) படிப்பில் சேர, இளங்கலை தமிழ் அல்லது பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இளம் அறிவியல் ஃ நிலத்தியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில் மற்றும் நில அறிவியல்துறை இந்தப் படிப்பை நடத்துகிறது. மொத்தம் 20 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
*முதுநிலை – மெய்யியல் (M.A. Philosophy) படிப்பில் சேர, இளங்கலை தமிழ் அல்லது பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெய்யியல்துறை இந்தப் படிப்பை நடத்துகிறது. மொத்தம் 20 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
II.முதுநிலைப் பட்டயம் பாடப்பிரிவுகள் (Post Graduate Diploma Courses)
முதுநிலைப்பட்டயம் பாடப்பிரிவுகளாக –
1.மொழிபெயர்ப்பு
2.கல்வெட்டு இயல்
3.அகராதி இயல்
4.நிலத்தியல்
5.யோகா
6.நாடகம்
-ஆகியவற்றில் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
மொழிபெயர்ப்பு இயலில் முதுகலை பட்டயம் பெற விரும்புபவர்கள் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொத்தம் 20 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தப்படிப்பை மொழிபெயர்ப்புத் துறை நடத்துகிறது.
கல்வெட்டு இயல் முதுகலை பட்டயம் பெற விரும்புபவர்கள் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொத்தம் 10 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தப்படிப்பை கல்வெட்டு இயல் மற்றும் தெல்லியல்துறை நடத்துகிறது.
அகராதி இயல் முதுகலை பட்டயம் பெற விரும்புபவர்கள் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொத்தம் 20 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தப்படிப்பை அகராதி இயல்துறை நடத்துகிறது. நிலத்தியல் முதுகலை பட்டயம் பெற விரும்புபவர்கள் ஏதாவது ஒரு முதுஅறிவியல் மற்றும் நிலத்தியல் பட்டம் / B.Sc. Geology பெற்றிருக்க வேண்டும். மொத்தம் 25 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தப்படிப்பை மெய்யியல் துறை நடத்துகிறது.
யோகா படிப்பில் முதுகலை பட்டயம் பெற விரும்புபவர்கள் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொத்தம் 20 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தப்படிப்பை மெய்யியல் துறை நடத்துகிறது. நாடகம் படிப்பில் முதுகலை பட்டயம் பெற விரும்புபவர்கள் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொத்தம் 20 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தப்படிப்பை நாடகத்துறை நடத்துகிறது.
III.பட்டயம் பாடப்பிரிவுகள் (ஓராண்டு) (Diploma Courses) (one Year)
பட்டயம் பாடப்பிரிவுகளாக கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
1.இசை
2. பரதநாட்டியம்
3.ஆவண மேலாண்மை
4.நாட்டுப்புறவியல்
5.ஒப்பிலக்கியம்
6.சுவடியல்
7.மூலிகை அழகுக்கலை
8.கணிப்பொறி பயன்பாடு
9.யோகா
10.திருக்கோவில் நிர்வாகம்
11.சைவ சித்தாந்தம்
12.கல்வெட்டு இயல்
இசை – பட்டயம் பாடப்பிரிவில் மொத்தம் 15 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்று இசையில் சான்றிதழ் பெற்றவர்கள் இந்தப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இசைத்துறை இந்தப்படிப்பை நடத்துகிறது.
பரதநாட்டியம் – பட்டயம் பாடப்பிரிவில் மொத்தம் 15 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்று பரதநாட்டிய பயிற்சியில் சான்றிதழ் பெற்றவர்கள் இந்தப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இசைத்துறை இந்தப்படிப்பை நடத்துகிறது.
ஆவண மேலாண்மை – பட்டயம் பாடப்பிரிவில் மொத்தம் 40 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். அரிய கையெழுத்து சுவடித்துறை இந்தப்படிப்பை நடத்துகிறது.
நாட்டுப்புறவயில் – பட்டயம் பாடப்பிரிவில் மொத்தம் 20 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இந்தப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். நாட்டுப்புறவியல் துறை இந்தப்படிப்பை நடத்துகிறது.
ஒப்பிலக்கியம் – பட்டயம் பாடப்பிரிவில் மொத்தம் 20 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இந்தப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கிய பள்ளி இந்தப்படிப்பை நடத்துகிறது.
சுவடியல் – பட்டயம் பாடப்பிரிவில் மொத்தம் 20 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்இந்தப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். ஓலை சுவடித் துறை இந்தப்படிப்பை நடத்துகிறது.
மூலிகை அழகுக்கலை – பட்டயம் பாடப்பிரிவில் மொத்தம் 20 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். சித்த மருத்துவுத்துறை இந்தப்படிப்பை நடத்துகிறது.
கணிப்பொறி பயன்பாடு – பட்டயம் பாடப்பிரிவில் மொத்தம் 20 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். கணிப்பொறி அறிவியல் துறை இந்தப்படிப்பை நடத்துகிறது.
யோகா – பட்டயம் பாடப்பிரிவில் மொத்தம் 20 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். மெய்யியல் துறை இந்தப்படிப்பை நடத்துகிறது.
திருக்கோவில் நிர்வாகம் – பட்டயம் பாடப்பிரிவில் மொத்தம் 20 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். மெய்யியல் துறை இந்தப்படிப்பை நடத்துகிறது.
சைவ சித்தாந்தம் – பட்டயம் பாடப்பிரிவில் மொத்தம் 20 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். மெய்யியல் துறை இந்தப்படிப்பை நடத்துகிறது.
கல்வெட்டு இயல் – பட்டயம் பாடப்பிரிவில் மொத்தம் 10 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இந்தப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். கல்வெட்டு இயல் மற்றும் தொல்லியல் துறை இந்தப்படிப்பை நடத்துகிறது.
IV.சான்றிதழ் பாடப்பிரிவுகள் (ஓராண்டு) (Certificate Courses) (one Year)
ஓராண்டு சான்றிதழ் பாடப்பிரிவுகளாக கீழ்க்கண்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன.
1.சிற்பக்கலைப் பயிற்சி
2.இசை
3.பரதநாட்டியம்
4.நாட்டுப்புறவியல்
5.யோகா
6.தமிழ்
சிற்பக்கலை ஓராண்டு சான்றிதழ் படிப்பில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். மொத்தம் 10 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தப்படிப்பை சிற்ப துறை நடத்துகிறது.
இசை ஓராண்டு சான்றிதழ் படிப்பில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். மொத்தம் 10 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தப்படிப்பை இசைத்துறை நடத்துகிறது.
பரதநாட்டியம் ஓராண்டு சான்றிதழ் படிப்பில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். மொத்தம் 10 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்தப்படிப்பை இசைத்துறை நடத்துகிறது.
நாட்டுப்புறவியல் ஓராண்டு சான்றிதழ் படிப்பில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். மொத்தம் 20 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்தப்படிப்பை நாட்டுப்புறவியல் துறை நடத்துகிறது.
யோகா ஓராண்டு சான்றிதழ் படிப்பில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். மொத்தம் 20 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தப்படிப்பை மெய்யியல் துறை நடத்துகிறது.
தமிழ் ஓராண்டு சான்றிதழ் படிப்பில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். மொத்தம் 20 பேர் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தப்படிப்பை இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கிய பள்ளி நடத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு…
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை,
தஞ்சாவூர்.
இணையதளம் : www.tamiluniversity.ac.in
தொலைபேசி : 04362-227089, 226720
மின்னஞ்சல்: tamilunivreg@gmail.com,
tuadmissionsection@gmail.com