மத்திய மந்திரிகளாக நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் பதவியேற்பு

நாட்டின் பிரதமராக 3-வது முறையாக மோடி பதவியேற்றுக்கொண்டார்.;

Update:2024-06-09 19:52 IST
மத்திய மந்திரிகளாக நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் பதவியேற்பு

புதுடெல்லி,

ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது. தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது. அதன் பின்னர் நாட்டின் பிரதமராக 3-வது முறையாக மோடி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் மந்திரி சபையில் மத்திய மந்திரிகளாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் பதவியேற்றனர்.

தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோரும் மத்திய மந்திரியாக பதவியேற்றுக்கொண்டனர். தொடர்ந்து மத்திய இணை மந்திரியாக எல்.முருகனும் பதவியேற்றுக் கொண்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்