தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதுவை தலைமை செயலகத்தில் நடந்தது.;
புதுச்சேரி
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி தேசிய ஒற்றுமை தின உறுதி மொழி மற்றும் லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நேர்மைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதுவை தலைமை செயலகத்தில் இன்று நடந்தது. தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா உறுதிமொழிகளை வாசிக்க தலைமை செயலக ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தமிழில் உறுதிமொழியை வாசிக்க தமிழிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வல்லவன் உறுதிமொழியை வாசிக்க அலுவலக ஊழியர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
திருபுவனை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலும், கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலும் போலீசார் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்