வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை
புதுச்சேரியில் வெவ்வெறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.;
புதுச்சேரி
லாஸ்பேட்டை லட்சுமி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). இவரது மனைவி சுகுணா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கார்த்திகேயன் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை குணசேகரன் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் வீட்டில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்டார்கோவில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கமல் பாட்ஷா (52). புதுவை திருவள்ளுவர் சாலையில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கடந்த ஆண்டு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தநிலையில் கமல்பாட்ஷாவும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இன்று காலை அவர் கூரியர் நிறுவனத்தின் குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.