மோட்டார் சைக்கிளை திருடி 2 வாலிபர்கள் கைது

உருளையன்பேட்டை போலீசார் திருவள்ளுவர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது திருட்டு வாகனத்தை ஓட்டி வந்த 2 வாலிபர்களை கைது செய்தனர்.;

Update:2023-04-02 23:27 IST

புதுச்சேரி

உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் திருவள்ளுவர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மடக்கி ஆவணங்களை கேட்டனர். அப்போது அவர்களிடம் மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்கள் ஏதுவும் இல்லை.

விசாரணையில் அவர்கள், மரக்காணம் ஆலத்தூரை சேர்ந்த ஆனந்த் (வயது28), அவருடைய நண்பரான எம்.புதூர் புதுப்பாக்கம் காலனியை சேர்ந்த அருண் (19) என்பதும், அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைதான ஆனந்த் மீது தமிழகத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்